ரூ.5.10 கோடி மதிப்பில் பறக்கும் பைக் : பார்வையாளர்களுக்கு பிரமிப்பூட்டிய "ஹோவர்பைக்"
ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பறக்கும் பைக் பார்வையாளர்களுக்கு பிரமிப்பூட்டியது. A.L.I. Technologies நிறுவனம் X Turismo லிமிடெட் எடிஷன் என்ற புதிய வகை ஹோவர்பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது.
5 கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த ஹோவர்பைக்கில் வழக்கமாக இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் எஞ்சினுடன் கூடுதலாக பேட்டரியில் இயங்கும் 4 மோட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த ஹோவர்பைக்கின் மூலம் வானில் 40 நிமிடங்களுக்கு 100 கிலோமீட்டர் வேகம் வரை பறக்க முடியும். ஃபுஜி மலை அருகே சோதனை ஓட்டத்தின் போது வானில் ஹோவர்பைக் வட்டமிட்ட காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களை மீட்க இந்த ஹோவர் பைக் பயன்படுத்தப்பட உள்ளது.
Flying bike flies on the circuit Fuji Speedway in Japanhttps://t.co/98IlrDHmkU#FlyingBike #Hoverbike #Aircraft #AirMobility #UAM #ALI_Tech_Inc #XTURISMO #FujiSpeedway #空飛ぶバイク #エアーモビリティ #ホバーバイク pic.twitter.com/snfIgsWKhy
Comments